ஆப்கானிஸ்தானில் இந்திய தூதரகம் மீதான தாக்குதல் முறியடிப்பு
ஆப்கானிஸ்தானில் இந்திய தூதரகம் மீதான தற்கொலை தீவிரவாதிகள் தாக்குதல் முறியடிக்கப்பட்டது. ஆப்கானிஸ்தானில் மேற்கு நங்கார்கர் மாகாணத்தில் ஜலாலபாத் உள்ளது. மாகாண தலைநகரான இங்கு இந்திய தூதரக அலுவலகம் உள்ளது. அங்கு தற்கொலை படை தாக்குதல் நடத்த தலிபான் தீவிரவாதிகள் திட்டமிட்டிருப்பதாக உளவுத் துறைக்கு தகவல் கிடைத்தது. அதைத் தொடர்ந்து அங்கு ராணுவ வீரர்கள் ரோந்து சுற்றி வந்தனர். அப்போது அங்கு சந்தேகப்படும் நிலையில் சுற்றித்திரிந்த ஒருநபரை பிடித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவன் கபிசா மாகாணத்தில் உள்ள தகாப் மாவட்டத்தை சேர்ந்தவன் என்பது தெரியவந்தது. இந்திய தூதரகத்தில் தற்கொலை தாக்குதல் நடத்த திட்டமிட்டு வந்ததாக கூறினான்.
எனவே அவனை ராணுவத்தினர் கைது செய்தனர். இத்தகவலை நங்கார்கர் மாகாண கவர்னரின் செய்தி தொடர்பாளர் அததுல்லாலுதின் தெரிவித்தார்.
இது இந்த வாரத்தில் நடந்த 2–வது சம்பவம் ஆகும். கடந்த வாரம் ஜலாலாபாத் தூதரகம் அருகே அடா–வுர் – ரஹ்மான் என்கிற ஹன்சலா மற்றும் அப்துல்லா என்கிற குவா இஸ்மாயில் ஆகிய 2 ஐ.எஸ். தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டனர்.
அவர்களிடம் இருந்து 30 கிலோ எடையுள்ள வெடிகுண்டு பறிமுதல் செய்யப்பட்டது. இதுகுறித்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சக செய்தி தொடர்பு அதிகாரி விகாஸ் ஸ்வரூப் கருத்து தெரிவித்துள்ளார்.
இச்சம்பவங்கள் ஆப்கானிஸ்தானில் உள்ள இந்திய தூதரகங்கள் தீவிரமாக கண்காணிக்கப்பட வேண்டும் என்பதை காட்டுகிறது’’ என்றார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply