டெல்லியில் எல்லைப் பாதுகாப்பு படை விமானம் விபத்துக்குள்ளானது:10பேர் உயிரிழப்பு

aircraftஎல்லைப் பாதுகாப்பு படைக்குச் சொந்தமான சிறிய ரக விமானம் டெல்லி அருகே விபத்துக்குள்ளானது. விமானத்தில் பயணம் செய்த 10 பேரும் உயிரிழந்ததாக தீயணைப்புப் படையினர் தெரிவித்துள்ளனர். எல்லைப் பாதுகாப்புப் படைக்குச் சொந்தமான சூப்பர்சிங் ஏர்கிராஃப்ட் எனப்படும் சிறிய ரக விமானம் டெல்லியில் இருந்து ராஞ்சிக்கு புறப்பட்டுச் சென்றது. 2 விமானிகள் உட்பட 10 பேருடன் சென்றதாக கூறப்படும் இந்த விமானம், தொழில்நுட்ப கோளறு காரணமாக, பாதியில் மீண்டும் டெல்லிக்கு திரும்பியுள்ளது.

துவாரகா பகுதியில் விமானம் தரையிரங்கும்போது கட்டுப்பாட்டை இழந்து சுவற்றின்மீது மோதி விபத்துக்குள்ளானது. விபத்து குறித்து தகவல் அறிந்ததும், தீயணைப்புப் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.

தேசிய பேரிடர் மீட்புப் படையினரும் சம்பவ இடத்தில் முகாமிட்டுள்ளனர். விமான விபத்தில் 10 பேரும் உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

விபத்திற்கான காரணம் குறித்து விமானப் போக்குவரத்துத்துறை அமைச்சகம் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. இதனிடையே மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், சம்பவத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply