தொழில்நுட்பக் கோளாறு: செவ்வாய் கிரகத்துக்கு செயற்கைக்கோளை ஏவும் திட்டத்தை கைவிட்டது, நாசா
செவ்வாய் கிரகத்துக்கு ஏற்கனவே செயற்கைக்கோளை அனுப்பி வெற்றிகரமாக ஆய்வுகளை நடத்திவரும் அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா, அடுத்தகட்டமாக வரும் மார்ச் மாதம் 18-ம் தேதி மேலும் ஒரு செயற்கைக்கோளை செவ்வாய்க்கு அனுப்பும் திட்டத்துடன் அதற்கான ஆயத்த வேலைகளில் முனைப்புகாட்டி வந்தது.இதற்கான திட்ட மதிப்பீடு 675 மில்லியன் டாலராக அறிவிக்கப்பட்ட நிலையில், செயற்கைக்கோளை ஏவுவதற்கு தேவையான ராக்கெட் உள்ளிட்ட உபகரணங்களை வாங்க இதுவரை 525 மில்லியன் டாலர்கள் செலவிடப்பட்டுள்ளது.
‘இன்ஸைட்’ என பெயரிடப்பட்ட இந்த செயற்கைக்கோளில் பூமியை மிகவும் நெருக்கமாக ஆய்வுசெய்து, நிலநடுக்கம் உள்ளிட்ட பேரழிவுகளைப் பற்றி வெகு துல்லியமாக எச்சரிக்கை விடுக்கும்வகையில் சிறப்பு உபகரணங்கள் பொருத்தப்பட்டுள்ளன.
இவற்றில் ஒரு நுண்நோக்கியில் ஏற்பட்ட கசிவை சீர்படுத்தும் பணிகள் தோல்வியில் முடிந்ததால் வரும் மார்ச் மாதம் செவ்வாய் கிரகத்துக்கு இந்த செயற்கைக்கோளை ஏவும் திட்டத்தை ஒத்திவைத்துள்ளதாக நாசா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply