உலகின் மிகப் பிரபலமான தலைவர்கள் குறித்த கருத்துக்கணிப்பில் பிரதமர் மோடிக்கு 7-வது இடம்

modiஉலகின் மிகப் பிரபலமான தலைவர்கள் பட்டியலில் அமெரிக்க அதிபர் ஒபாமா முதலிடத்திலும், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஏழாவது இடத்திலும் உள்ளதாக கருத்துக்கணிப்பு முடிவு ஒன்றில் தெரியவந்துள்ளது. பிரிட்டனைச் சேர்ந்த ஓ.ஆர்.பி இன்டர்நேஷனல் என்ற அமைப்பின் தலைமையில் உலக அளவில் 65 நாடுகளில் இந்த கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது. இதன்படி, உலகளவில் மிகவும் பிரபலமான தலைவராக அமெரிக்க அதிபர் ஒபாமா இருக்கிறார். அவருக்கு ஆதரவாக 59 சதவீதம் பேரும், அவரை விரும்பவில்லை என்று 29 சதவீதம் பேரும் கருத்துத் தெரிவித்துள்ளனர். அவரைத் தொடர்ந்து, இரண்டாவது இடத்தில் ஜெர்மன் பிரதமர் ஏஞ்சலா மெர்க்கலும், மூன்றாவது இடத்தில் பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூனும் உள்ளனர். 

 

பிரான்ஸ் அதிபர் பிரான்சுவா ஹொலாண்ட், ரஷிய அதிபர் விளாதிமிர் புதின், சீன அதிபர் ஜீ ஜின்பிங் ஆகியோர் அடுத்தடுத்த இடங்களைப் பிடித்துள்ளனர். இந்த பட்டியலில் பிரதமர் நரேந்திர மோடி ஏழாவது இடத்தைப் பிடித்துள்ளார். அவரை ஆதரித்து 24 சதவீதம் பேரும், அவரை விரும்பவில்லை என்று 20 சதவீதம் பேரும் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

 

 

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply