ஆஸ்திரேலியாவில் பயங்கர தாக்குதலுக்கு சதி: 2 தீவிரவாதிகள் கைது
சிரியா நாட்டில் ஐ.எஸ். தீவிரவாதிகள் மீது அமரிக்க கூட்டு படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன. இந்த படையில் பிரான்சு நாடும் இடம் பெற்று இருந்தது. எனவே, பிரான்ஸ் மீது ஐ.எஸ். தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினார்கள்.ஆஸ்திரேலியா நாடும் அமெரிக்கா கூட்டு படையில் இடம் பெற்றுள்ளது. இதனால் ஆஸ்திரேலியாவில் தாக்குதல் நடத்த ஐ.எஸ். தீவிரவாதிகள் திட்டமிட்டு இருந்தனர். இதையடுத்து நாடு முழுவதும் தேடுதல் வேட்டை நடைபெற்று வந்தது. தீவிரவாதிகள் என சந்தேகப்படும் 11 பேரை ஏற்கனவே ஆஸ்திரேலிய போலீசார் கைது செய்து இருந்தனர்.
இதற்கிடையே ஆஸ்திரேலியாவில் பயங்கர தாக்குதலுக்கு சதி திட்டம் தீட்டி இருந்ததாக அப்துல்லா சாலிகி (வயது 24) முகமது அல் மவுசு (20) ஆகியோரை போலீசார் இப்போது கைது செய்துள்ளனர். அவர்கள் இருவரும் சிட்னி நகரின் புறநகர் பகுதியில் பதுங்கி இருந்த போது கைது செய்யப்பட்டனர்.அவர்கள் சிட்னி துறைமுகத்தை தகர்க்க சதி திட்டம் தீட்டி இருந்ததுடன் ஆஸ்திரேலிய போலீஸ் அதிகாரிகள் குடியிருப்பையும் தாக்குவதற்கு திட்டமிட்டு இருந்தனர். அவர்களிடம் இருந்து பல்வேறு ஆவணங்கள், புகைப்படங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.கடந்த 5–ந்தேதி சில தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டனர். அவர்களுக்கும், இவர்களுக்கும் தொடர்பு இருப்பது தெரிய வந்தது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply