அமெரிக்காவில் பரபரப்பு; புயலில் சிக்கி 11 பேர் பலி: மிசிசிப்பியில் அவசர நிலை பிரகடனம்
அமெரிக்காவின் தெற்கு பகுதியில் உள்ள மாநிலங்களில் கடுமையாக வீசி வரும் புயலில் சிக்கி 11 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து மிசிசிப்பி மாநிலம் சூறாவளிக் காற்று வீசும் பகுதிகளில் அசசர கால நிலையை பிரகடனம் செய்துள்ளது. மணிக்கு 160 கி.மீ வேகத்தில் வீசும் பலத்த சூறாவளிக் காற்றால் கிழக்கு டென்னசி மாகாணத்தில் 100-க்கும் மேற்பட்ட வீடுகளும் கட்டிடங்களும் சேதமடைந்துள்ளன. மிசிசிப்பி மாநிலத்தில் மட்டும் 14 இடங்களில் சூறாவளி மையம் கொண்டுள்ளதாக தெரிவித்துள்ள அம்மாநில கவர்னர் பில் பிரயான் மாநிலத்தில் அவசர நிலையை பிரகடனம் செய்துள்ளார்.
மிசிசிப்பி மட்டுமல்லாது, அலபாமா, அர்கன்சஸ், இண்டியானா ஆகிய மாகாணங்களிலும் சூறாவளிக்காற்று வீசி வருகிறது. புயல் காரணமாக இதுவரை குறைந்தது 11 பேர் பலியாகியிருப்பதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply