ஊடகவியலாளர் மீதான தாக்குதல் வன்மையாக கண்டிக்கத்தக்கது : பா.உதயராசா
ஊடகவியலாளர் மீதான தாக்குதல் வன்மையாக கண்டிக்கத்தக்கது என்று சிறீரெலோ கட்சியின் செயலாளர் நாயகம் பா.உதயராசா தொரிவித்தார்.நேற்று (24.12.2015) பகல் வவுனியா நகர் பகுதியில் ஊடகவியலாளர் மீது நடாத்தப்பட்ட தாக்கதலுக்கு கண்டனம் தெரிவித்து ஊடகங்களுக்க அளித்த செவ்வியில் இவ்வாறு தெரிவித்தார்.
இச் செவ்வியின் விபரம் வருமாறு,
நேற்று (24.12.2015) பகல் வவுனியா நகர்ப்பகுதியில் செய்தி சேகரிக்கச்சென்ற ஊடகவியலாளர் மீது வர்த்தக நிலைய பணியாளர் ஒருவரினால் தாக்குதல் நடத்தப்பட்டமை வன்மையாக கண்டிக்கத்தக்கது. இத்தாக்குதல் நகர்ப்பகுதியில் நகரசபை அதிகாரிகளுக்கும், காவல்துறை அதிகாரிகளுக்கும், ஊடகவியலாளர்களுக்கும், ஏராளமான பொதுமக்களுக்கும் முன்னிலையில் இடம்பெற்றுள்ளமை, தாக்குதல் நடத்திய குறித்த நபரின் தான்தோன்றித்தனத்தினையும் அருகிவரும் சகிப்புத்தன்மையினையும் வெளிப்படுத்துகின்றது.
ஊடகவியலாளர்களின் சுதந்திரமான செயற்பாடுகளை அச்சுறுத்தும் வகையான இவ்வாறான செயற்பாடுகளுக்கு இடமளிக்காது ஊடகசுதந்திரத்தினை உறுதிப்படுத்த அனைத்து தரப்பினரும் முன்வரவேண்டும் என்றார்.
மூலம்/ஆக்கம் : TELOnewsYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply