17 ஆயிரம் தொழிற்சாலைகள் இழுத்து மூடப்பட்டது: அதிகரிக்கும் காற்று மாசுபாட்டால் சீனா அதிரடி
சீனாவில் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு காற்று மாசுபாடு அதிகரித்துள்ள காரணத்தால் அங்கு அண்மையில் இரண்டாவது முறையாக ரெட் அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டது. இதையடுத்து 2,100 தொழிற்சாலைகளில் உற்பத்தியை நிறுத்தவும் உத்தரவிடப்பட்டது.இந்த நிலையில், நடப்பாண்டின் ஜனவரி மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை ஒரு லட்சத்து 40 ஆயிரம் தொழிற்சாலைகளில் மேற்கொள்ளப்பட்ட மாசு வெளியேற்ற ஆய்வு முடிவுகளின்படி, நேற்றைய தினம் மட்டும் 17 ஆயிரம் தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளதாக சீன அரசு அறிவித்துள்ளது.
இது தவிர, 28 ஆயிரத்து 600 நிறுவனங்கள் செயல்பட தடை விதித்திருப்பதாகவும் சீன சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
சீனாவின் கிழக்கு மற்றும் மத்திய சீனாவின் பீஜிங் உட்பட 33 நகரங்களில் கடும் பனிப்புகை சூழ்ந்துள்ளது. இதை 30 சதவீதம் வரை குறைப்பதற்கான எல்லா நடவடிக்கைகளையும் எடுத்துவருவதாக நகரின் சுற்றுச் சூழல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply