சிரியாவில் ராணுவம் ஏவுகணை வீச்சில் கிளர்ச்சியாளர் படை தலைவர் பலி
சிரியாவில் அதிபர் பஷர்அல் ஆசாத்துக்கு எதிராக கடந்த 5 ஆண்டுகளாக உள்நாட்டு போர் நடந்து வருகிறது. அரசின் ராணுவத்தை எதிர்த்து கிளர்ச்சியாளர்கள் படை அமைத்து போரிட்டு வருகின்றனர். கிளர்ச்சியாளர்கள் படையில் ஜெய்ஸ்அல்– இஸ்லாம் (இஸ்லாமிய ராணுவம்) இயக்கம் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. தற்போது சிரியாவில் அரசுப் படைகளுக்கும், கிளர்ச்சியாளர் படைக்கும் இடையே கடும் சண்டை நடந்து வருகிறது.
இந்த நிலையில் கிழக்கு டமாஸ்கஸ் அருகே சவுதா பகுதியில் நேற்று சிரியா ராணுவம் ஏவுகணை வீச்சு நடத்தியது. சமீபத்தில் ரஷியாவிடம் இருந்து வாங்கப்பட்ட ஏவுகணைகள் வீசப்பட்டன.
அதில் கிளர்ச்சியாளர் படையின் தலைவர் ஷக்கான் அல்லோஷ் (44) பலியானார். இவருடன் மேலும் 5 கமாண்டர்களும் உயிரிழந்தனர். இத்தகவலை சிரியா ராணுவம் உறுதி செய்துள்ளது.
கிளர்ச்சியாளர்கள் ரகசிய கூட்டம் நடத்துவதை அறிந்து அதிரடி தாக்குதல் நடத்தியதாகவும், அதில் அல்லோஷ் இறந்ததாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
போர் விமானங்கள் 2 ரவுண்டுகளாக 4 ஏவுகணைகள் வீசப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் ஜெய்ஷ்அல்– இஸ்லாம் இயக்கத்தை சேர்ந்த 12 பேரும், அக்ரார் அல்–ஷாம் குழுவை சேர்ந்த 7 பேரும் அடங்குவர்.
சிரியாவில் கடந்த 5 ஆண்டுகளாக நடைபெறும் உள்நாட்டு போரை முடிவுக்கு கொண்டுவர ஐ.நா. தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. தற்போது கிளர்ச்சியாளர் படை தலைவர் அல்லோஷ் கொல்லப்பட்டது பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply