கிழக்கு மாகாணத்திற்கு காவற்துறை அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டியதில்லை:கருணா அம்மான்

கிழக்கு மாகாணசபைக்கு காவற்துறை அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டியது அவசியமில்லை என அமைச்சர் கருணா தெரிவித்துள்ளார். கிழக்கு மாகாணசபையில் பல்வேறு நிர்வாக சீர்கேடுகள் இடம்பெறுவதாக கருணா அம்மான் பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.கிழக்கு மக்கள் பிரச்சினைகள் தொடர்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கவனம் செலுத்துவார் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
 
தற்போதைய சூழ்நிலையின் கீழ் கிழக்கு மாகாணத்திற்கு காவற்துறை அதிகாரங்கள் வழங்கப்படக் கூடாது எனவும், அவ்வாறு வழங்கினால் அது பாரிய பின் விளைவுகளக்கு வழிகோலும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
 
எந்தவொரு தனிப்பட்ட இனச் சமூகத்தை திருப்திப்படுத்தும் வகையிலான அதிகாரப் பகிர்வுகள் மேற்கொள்ளப்படக் கூடாது என அவர் தெரிவித்துள்ளார்.
 
அதிகாரப் பகிர்வு யோசனைத் திட்டமானது சகல இன சமூகங்களையும் ஒன்றிணைக்கும் வகையில் அமையப் பெற வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
தமிழ் மக்கள் சிங்கள அரசியல் தலைவர்களை ஒருபோதும் நிராகரிக்கவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
 
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க கிழக்கு மாகாணத்தில் அதிகளவான ஆதரவைப் பெற்றிருந்தார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
மேலும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஜனாதிபதியின் அழைப்பை ஏற்று பேச்சுவார்த்தைகளில் கலந்து கொள்ள வேண்டும் எனவும், பேச்சுவார்த்தைகளின் மூலம் பிரச்சினைக்கு தீர்வு காண முனைப்பு காட்ட வேண்டும் எனவும் கருணா அம்மான் தெரிவித்துள்ளார்.
 
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உண்மையான தமிழ் மக்கள் பிரதிநிதிகளாயின் நிச்சயமாக ஜனாதிபதியுடனான பேச்சுவார்த்தையில் கலந்து கொள்வார்கள் என நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply