மோதல் இடம்பெறும் பகுதிகளில் உள்ள மக்கள் பாதுகாக்கப்பட வேண்டும்:அமெரிக்கா

இலங்கையில் நிலவிவரும் பயங்கவாத தாக்குதல்கள் முடிவிற்கு கொண்டுவரப்படும் வேண்டும் என அமெரிக்க ராஜாங்க திணைக்களத்தின் பதில் பேச்சாளர் கோடன் டுகிட் தெரிவித்துள்ளார்.இந்த பிரச்சினைக்கான தீர்வினை ஆராய்ந்து உடனடியாக நடவடிக்கைகளை மேற்கொண்டு தீர்வினை எட்ட வேண்டும். அத்துடன் மோதல் இடம்பெறும் பகுதிகளில் உள்ள மக்கள் பாதுகாக்கப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இவ்வாறான பயங்கவாத நடவடிக்கைகளினால் பொதுமக்கள் பாதிப்படைவதாகவும் தெரிவிதுள்ளார் எனவே சகல தரப்பினரும் இணைந்து சமாதானத்தினை உருவாக்க முயல வேண்டும் எனவும் இராஜாங்க திணைக்களத்தில் இடம்பெற்ற வராந்த ஊடகவியலாளர் மாநாட்டில் தெரிவித்தார்.

விடுதலை புலிகள் சமாதான பேச்சுவார்த்தைகளில் ஈடுபட வேண்டுமென அமெரிக்கா விரும்புகிறதா என ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு, ” எமக்கு என்ன விருப்பம் , விருப்பமில்லை என்பது கேள்வியல்ல.உடனடியாக இலங்கைக்கு தேவைப்படுவது குறித்து நான் விளக்கியுள்ளேன்” என கோடன் டுகிட் தெரிவித்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply