அந்நிய எல்லைக்குள் ராணுவத்தை அனுமதிக்கும் புதிய தீவிரவாத தடுப்பு சட்டம்: சீன அரசு ஒப்புதல்
தீவிரவாத நடவடிக்கைகளை கட்டுக்குள் கொண்டு வருவதற்காகவும், தொழில்நுட்ப நிறுவனங்களில் இருந்து முக்கியத்துவம் வாய்ந்த தகவல்களை அரசுக்கு வழங்குவது தொடர்பாகவும் புதிய தீவிரவாத தடுப்புச் சட்டத்திற்கு சீன அரசு ஒப்புதல் அளித்துள்ளது. 159 உறுப்பினர்களை கொண்ட தேசிய மக்கள் காங்கிரசின் நிலைக்குழு எவ்வித எதிர்ப்பும் இன்றி இந்த சட்டத்தை ஏற்றுக்கொண்டது. ஏற்கனவே இந்த சட்ட வரைவு சீன கம்யூனிஸ்ட் கட்சியால் ஒப்புதல் அளிக்கப்பட்டிருந்தது.
இந்த புதிய சட்டமானது, சீனாவின் மக்கள் விடுதலை ராணுவம் தனது தீவிரவாத தடுப்பு நடவடிக்கைகளை எல்லை கடந்து செய்ய அனுமதித்துள்ளது. மக்கள் விடுதலை ராணுவம் மற்றும் நாட்டின் பாதுகாப்பு படைகள் மத்திய ராணுவ ஆணையத்தின் அனுமதியை பெற்று அத்தகைய செயல்களில் ஈடுபடலாம்.
மக்கள் பாதுகாப்பு மற்றும் தேசிய பாதுகாப்பு அதிகாரிகள் அரசின் அனுமதி பெற்று வெளிநாடுகளில் தீவிரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகளுக்கு படை வீரர்களை அனுப்பலாம்.
பிரான்ஸ் தலைநகர் பாரிசில் ஐ.எஸ் தீவிரவாதிகள் நடத்திய தீவிரவாத தாக்குதலை அடுத்து சீன அரசு இத்தகைய தீவிரவாத தடுப்பு சட்டத்தை கொண்டு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply