அமெரிக்காவை சுழற்றி அடிக்கும் புயல்: டெக்சாஸ் மாகாணத்தில் 11 பேர் பலி

puyal அமெரிக்காவின் பல மாநிலங்களில் கடந்த சில நாட்களாக கடும் புயல் வீசி வருகிறது. இதனால், சில தினங்களுக்கு முன் மிசிசிப்பி மாநிலத்தில் அவசர கால நிலை பிரகடனம் செய்யப்பட்டது. மணிக்கு 160 கி.மீ வேகத்தில் வீசிய பலத்த சூறாவளிக் காற்றால் கிழக்கு டென்னசி மாகாணத்தில் 100-க்கும் மேற்பட்ட வீடுகளும் கட்டிடங்களும் சேதமடைந்தன. மிசிசிப்பி மாநிலத்தில் மட்டும் 20 இடங்களில் சூறாவளி மையம் கொண்டுள்ளதாக அம்மாநில கவர்னர் பில் பிரயான் தெரிவித்தார். இந்நிலையில், டல்லாஸ் பகுதியில் தொடர்ச்சியான மழை மற்றும் புயலில் சிக்கி 11 பேர் பலியாகினர். ஏராளமான வீடுகள் சேதமடைந்துள்ளது. மின்சாரம் பல்வேறு இடங்களில் துண்டிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. 

 

மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட டல்லாஸின் வடகிழக்கு பகுதியான கார்லாந்தில் மட்டும் 8 பேர் உயிரிழந்துள்ளனர். மீதி 3 பேர் டல்லாஸ் மெட்ரோ பகுதியில் பலியாகினர். டெக்சாஸ் மாகாணத்தில் 5 முறையும், ஓக்லாமா மாகாணத்தில் ஒரு முறையும் சூறாவளிக் காற்று தாக்கியுள்ளது.

 

இதன் காரணமாக அமெரிக்காவில் இருந்து இயக்கப்படக் கூடிய 440 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. முன்னதாக, அமெரிக்காவின் தெற்கு மற்றும் வடமத்தியப் பகுதி மாகாணங்களில் புதன்கிழமை வீசிய புயல் மற்றும் சுழல் காற்றுக்கு 14 பேர் பலியானது குறிப்பிடத்தக்கது.

 

 

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply