சீன நிலச்சரிவு: பேரழிவுக்குக் காரணமான அதிகாரி திடீர் தற்கொலை

CHINAசீனாவில் தெற்கு பகுதியில் உள்ள குவாங்டாங் மாகாணத்தில் மலைபிரதேசத்தில் உள்ள ஷென்சென் ஒரு தொழில் நகரமாகும். இங்கு கார்கள் முதல் செல்போன் வரை அனைத்து பொருட்களும் தயாரிக்கும் தொழிற்சாலைகள் உள்ளன. அந்தத் தொழிற்பூங்காவில், கடந்த 2 ஆண்டுகளாக நடைபெற்று வரும் கட்டடப் பணிகளுக்காகத் தோண்டியெடுக்கப்பட்ட மண், 1 லட்சம் சதுர அடி பரப்பில், 100 மீட்டர் உயரத்துக்கு மலை போல குவித்து வைக்கப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது.இதனால் அங்கு சீனாவின் பல பகுதிகளை சேர்ந்த இளைஞர்கள் தங்கி பணிபுரிகின்றனர். இந்த நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அங்கு பெய்த பலத்த மழையால் கடும் நிலச்சரிவு ஏற்பட்டது. அதில், தொழிற்பேட்டையில் உள்ள 33 கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாகி மண்ணுக்குள் புதைந்தன. இதில் 25 பெண்கள் உள்பட 76 பேர் மண்ணுக்குள் புதையுண்டனர்.

இதையடுத்து அந்தப் பகுதியில் ராணுவ வீரர்கள், தீயணைப்புப் படையினர், போலீஸார், சுகாதாரப் பணியாளர்கள் ஆகியோர் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். நிலச்சரிவு ஏற்பட்ட 60 மணி நேரத்துக்குப் பிறகு இருவர் உயிருடன் மீட்கப்பட்டனர். அதில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மண்ணுக்குள் புதையுண்ட மேலும் 3 பேரின் சடலங்கள் அண்மையில் மீட்கப்பட்டன. எஞ்சியவர்களைத் தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்த நிலச்சரிவுக்கு மனிதத் தவறே காரணம் என்று விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ள நிலையில், அங்கு குவித்து வைக்கப்படும் கட்டிட இடிபாடுகளை அகற்றும் பொறுப்பில் உள்ள அரசு முகமையின் தலைமைப் பொறுப்பில் இருந்த அதிகாரி ஒருவர், மன உளைச்சல் காரணமாக மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இந்த தகவலை தெரிவித்துள்ள அதிகாரிகள் அவரது தற்கொலைக்கும் நிலச்சரிவுக்கும் எந்த ஒரு தொடர்பும் இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளனர். இந்த நிலச்சரிவுக்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கடந்த வாரம் சீன அரசு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply