விடுதலைப் புலிகளின் பிரச்சாரங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் : ஜனாதிபதி

தமிழீழ விடுதலைப் புலிகளினால் உலக அரங்கில் மேற்கொள்ளப்பட்டு வரும் பிரச்சாரங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.அண்மைக்காலமாக அடைந்து வரும் படுதோல்வியிலிருந்து மீளும் நோக்கில் சர்வதேச சக்திகளின் ஒத்துழைப்புடன் யுத்தத்தை நிறுத்த தமிழீழ விடுதலைப் புலிகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக ஜனாதிபதி அமைச்சரவைக் கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.
 
புலிகளின் பிரச்சார நடவடிக்கைகளுக்கு உகந்த முறையில் பதிலடி கொடுக்க இலங்கையின் வெளிநாட்டு தூதுவராலயங்கள் தயார் படுத்த வேண்டுமென ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.இலங்கை அரசாங்கத்திற்கும் படைவீரர்களுக்கும் எதிராக விடுதலைப் புலிகள் தீவிர போலிப்பிரச்சாரங்களை மேற்கொண்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
 
இந்த போலிப் பிரச்சாரங்களை முறியடிக்கும் வகையில் ராஜதந்திர ரீதியிலான நடவடிக்கைகளை வெளிநாடுகளில் இயங்கி வரும் தூதுவராலயங்கள் மேற்கொள்ள வேண்டுமென ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply