ஹாங்காங் பாரில் பணிப்பெண்ணிடம் தகாத முறையில் நடந்துகொண்ட ஆஸ்திரேலிய மந்திரி ராஜினாமா
ஆஸ்திரேலியாவில் பிரதமர் மால்கோம் டர்ன்புல் தலைமையிலான மந்திரிசபையில் நகர கட்டமைப்புத்துறை மந்திரியாக பதவி வகிக்கும் ஜேமி பிரிக்ஸ் சமீபத்தில் அரசுமுறை பயணமாக சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள ஹாங்காங் நகருக்கு சென்றிருந்தார். அப்போது, நள்ளிரவு நேரத்தில் அங்குள்ள பிரபல மதுவிடுதிக்கு சென்ற அவர், அங்கு பணியாற்றும் ஒரு பெண்ணிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாக பாதிக்கப்பட்ட பெண் புகார் அளித்தார். இந்த செய்தி ஊடகங்களின் மூலம் பரவத் தொடங்கியதும் இதுதொடர்பாக விசாரணை நடத்தும்படி பிரதமர் மால்கோம் டர்ன்புல் உத்தரவிட்டார்.
பாதிக்கப்பட்ட பெண்ணிடம் நேரடியாக மன்னிப்பு கேட்டதாக முன்னர் தெரிவித்திருந்த மந்திரி ஜேமி பிரிக்ஸ், நேற்று தனது பதவியை ராஜினாமா செய்தார்.
இதேபோல், தனது அரசியல் எதிரியை பழிவாங்க ஆட்சி, அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியதாக குற்றம்சாட்டப்பட்ட மற்றொரு மந்திரியான மால் புரோ என்பவரும் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இருவரின் ராஜினாமா கடிதங்களும் ஏற்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள பிரதமர் மால்கோம் டர்ன்புல், மேற்படி துறைகளுக்கு புதிய மந்திரிகள் நியமிக்கப்படுவார்கள் என அறிவித்துள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply