பாரிஸ் தாக்குதல் தீவிரவாதியை தேடும் வேட்டையில் கொல்லப்பட்ட போலீஸ் நாய்க்கு வீரதீர விருது
பிரான்ஸ் தலைநகரான பாரிசில் கடந்த நவம்பர் மாதம் தீவிரவாதிகள் நடத்திய தொடர் தாக்குதலில் 130 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலில் தொடர்புடையை தீவிரவாதிகளை பிடிக்க போலீசார் நடத்திய தேடுதல் வேட்டையின்போது ஒரு போலீஸ் நாய் குண்டு பாய்ந்து உயிரிழந்தது. டீசல் என அழைக்கப்பட்ட அந்த பெல்ஜியன் ஷெப்பர்ட் வகையைச் சேர்ந்த நாய்க்கு பிரிட்டைனில் செயல்பட்டுவரும் ஒரு அமைப்பு வீரதீர விருது வழங்குவதாக அறிவித்துள்ளது.
People’s Dispensary for Sick Animals என பெயரிடப்பட்டுள்ள இந்த அமைப்பு கடந்த 1943-ம் ஆண்டில் இருந்து இதுபோல் வீரதீர சாகசங்களை செய்யும் உயிரினங்களுக்கு டிக்கின் விருதுகளை வழங்கி வருகின்றது. இரண்டாம் உலகப்போரின்போது செய்திகளை சுமந்து சென்ற புறாக்கள், ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் புதைத்து வைத்திருந்த கண்ணிவெடிகளை கண்டுபிடித்த மோப்ப நாய்கள் ஆகியவற்றுக்கு இதைப்போன்ற டிக்கின் விருதுகள் முன்னர் வழங்கப்பட்டுள்ளது.
தற்போது, பாரிஸ் தாக்குதல் தொடர்புடைய தீவிரவாதியை தேடும் வேட்டையில் கொல்லப்பட்ட போலீஸ் நாய்க்கு மரணத்துக்கு பின்னர் வீரதீர விருது வழங்கி இந்த அமைப்பு கவுரவித்துள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply