இரண்டாவது விமானம் தாங்கி போர் கப்பலை கட்டுகிறது சீனா

chinaசீனா தனது இரண்டாவது விமானம் தாங்கிய போர் கப்பலை கட்டி வருவதாக அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.டேலியன் நகரத்தில் உள்ள துறைமுகத்தில் முற்றிலும் உள்நாட்டு தயாரிப்பாக மிகப்பெரிய விமானம் தாங்கிய போர் கப்பலை கட்டிவருவதாக சீனா தெரிவித்துள்ளது. புதிய விமானம் தாங்கிய கப்பல் 50,000 டன் எடையை தாங்கி செல்லும் திறன் கொண்டதாக உருவாக்கப்பட்டு வருகிறது. இந்த கப்பலில் ஜே-15 போர் விமானங்களுக்கான தளமும் அமைக்கப்பட்டு வருகிறது.

ஏற்கனவே சீனாவிடம் ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட விமானம் தாங்கிய போர் கப்பல் ஒன்று இருப்பது குறிப்பிடத்தக்கது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply