குற்றமில்லாத மாவட்டமாக யாழ்.குடாநாட்டை மாற்ற நீதிபதிகள் பிரகடனம்!
2016ம் ஆண்டு யாழ். குடாநாடு, குற்றமில்லாத சமாதானமான மாவட்டமாக மாற்றுவதற்கு நீதிபதிகள் பிரகடனம் செய்துள்ளதாக யாழ். உயர் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் தெரிவித்தார்.நேற்று வெள்ளிக்கிழமை யாழ். நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற 2016ம் ஆண்டிற்கான அரச உத்தியோகத்தர்களுக்கான சத்திய பிரமாண நிகழ்வின் பின்னர் உத்தியோகத்தர்கள் மத்தியில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவ்வாறு நீதிபதிகள் சமூக நலன்கொண்ட தீர்ப்புக்களை வழங்குவார்கள். சமூக நலன், பொருளாதார சீரழிவுகள், கலாசார சீரழிவுகள், சமூக குற்றங்களை அழித்து ஒழிக்கின்ற நீதிபதிகள் பிரகடனப்படுத்துகின்றார்கள்.
2016ம் ஆண்டு யாழ்.குடாநாடு, குற்றம் இல்லாத சமாதானமான மாவட்டமாக மலரும் என்ற நம்பிக்கையுடன் செயற்படுவோம் என்றார்.அரச உத்தியோகத்தர்கள் நீதிக்கு தலைவணங்குபவர்களாக இருக்க வேண்டும்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply