1,47,000 சதுரமீட்டர் பரப்பளவு கொண்ட உலகின் மிகப்பெரிய சுரங்க ரெயில் நிலையம்: சீனாவில் திறப்பு

china21 கால்பந்தாட்ட மைதானங்கள் ஒன்றிணைந்ததுபோல் ஒரு லட்சத்து 47 ஆயிரம் சதுரமீட்டர் பரப்பளவு கொண்ட உலகின் மிகப்பெரிய சுரங்க ரெயில் நிலையம் சீனாவின் ஷென்ழென் நகரில் திறக்கப்பட்டது. ஹாங்காங் நகரின் எல்லையோரமுள்ள குவாங்டாங் மாகாணத்தில் அமைந்துள்ள இந்த சுரங்க ரெயில் நிலையம் மூன்றடுக்களை கொண்டதாக கட்டப்பட்டுள்ளது. ஒரே நேரத்தில் சுமார் 3 ஆயிரம் பயணிகள் இங்கு அமர முடியும்.

முன்னர், சாதாரண எக்ஸ்பிரஸ் ரெயில் மூலம் குவாங்க்ஸூ நகரில் இருந்து ஹாங்காங் நகருக்கு செல்ல இரண்டு மணிநேரம் ஆனது. கடந்த வியாழக்கிழமை இந்த புதிய அதிவேக சுரங்க ரெயில் நிலையம் திறக்கப்பட்ட பின்னர் இந்த பயண நேரம் தற்போது ஒன்றரை மணி நேரமாக குறைந்துள்ளது. இந்த வழித்தடத்தில் மணிக்கு சுமார் முன்னாறு கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் அதிவேக ரெயில்கள் இயக்கப்படுகின்றன.

ஷென்ழென் நகரில் வசிப்பவர்கள் இங்கிருந்து பதினைந்தே நிமிடத்தில் ஹாங்காங் நகரை சென்றடையலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply