தேர்தல் நிதியாக 728 கோடி ரூபாய் திரட்டி சாதனை புரிந்த ஹிலாரி கிளிண்டன்
அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பாக போட்டியிடும் ஹிலாரி கிளிண்டன், கடந்த 2015-ஆம் ஆண்டில் தேர்தல் பிரசார நிதியாக ரூ.728 கோடி (11.2 கோடி டாலர்) திரட்டி சாதனை படைத்துள்ளார். ரூ.650 கோடி தேர்தல் நிதி திரட்ட ஹிலாரி இலக்கு நிர்ணயித்திருந்த நிலையில், அதையும் தாண்டி ரூ.728 கோடி திரட்டி சாதனை படைத்துள்ளார். இவருக்கு எதிராக களத்தில் உள்ள, குடியரசு கட்சியைச் சேர்ந்த டொனால்டு டிரம்ப், தனது சொந்த செலவிலேயே தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்.
நியூயார்க்கைச் சேர்ந்த டொனால்டு டிரம்ப், அமெரிக்காவின் முன்னணி ரியல் எஸ்டேட் தொழிலதிபர்களில் ஒருவர்.குடியரசுக் கட்சியின் மற்றொரு வேட்பாளர் தேர்வு போட்டியாளரான ஜெப் புஷ், சில மாதங்களுக்கு முன்பே ரூ.650 கோடி தேர்தல் நிதி திரட்டியிருப்பது குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply