டெல்லியிலும் தீவிரவாதிகள் ஊடுருவல்?: உச்சகட்ட பாதுகாப்பு

new diliபஞ்சாபில் தாக்குதல் நடத்தி வரும் அதே நேரத்தில் தலைநகர் டெல்லியிலும் மிகப் பெரிய தாக்குதலை நடத்த ஜெயத்–இ–முகம்மது இயக்கம் திட்டமிட்டிருந்ததாக உளவுத்துறை தகவல் தெரிவித்தது.இதைத் தொடர்ந்து டெல்லியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டன.இந்த நிலையில் பாகிஸ்தானில் செயல்படும் ஜெயத்– இ–முகம்மது தீவிரவாத இயக்கத்தை சேர்ந்த 2 தீவிரவாதிகள் டெல்லிக்குள் ஊடுருவி இருப்பதாக உளவுத்துறை மத்திய அரசை எச்சரித்துள்ளது.

நேற்று உளவுத்துறை அளித்த தகவலில், “டெல்லிக்குள் வந்திருக்கும் 2 தீவிரவாதிகளும் தற்கொலை தாக்குதல் நடத்தி மிகப்பெரிய சேதத்தை ஏற்படுத்த திட்டமிட்டுள்ளனர்” என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து டெல்லியில் விமான நிலையம், மெட்ரோ ரெயில் நிலையங்கள், பஸ் நிலையங்கள், வழிபாட்டுத் தலங்கள், சுற்றுலா தலங்கள், மார்க்கெட் பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

டெல்லியில் சந்தேகப்படும்படி யாராவது காணப்பட்டால் உடனே தகவல் தெரிவிக்குமாறு டெல்லி போலீஸ் கமிஷனர் பினல் பிஸ்ஸி பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

டெல்லிக்குள் ஊடுருவி இருக்கும் 2 தீவிரவாதிகளும் எங்கு பதுங்கி உள்ளனர் என்று தெரியவில்லை. எனவே டெல்லி முழுவதும் வாகன சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

2 தீவிரவாதிகளும் கைவரிசை காட்டும் முன்பு அவர்கள் கதையை முடிக்க வேண்டும் என்று முக்கிய இடங்களில் கமாண்டோ படை வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளன.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply