உளவுபார்த்ததாக 5 பேரை சுட்டுக் கொலைசெய்த ஐ.எஸ். தீவிரவாதிகள் பிரிட்டனுக்கு எச்சரிக்கை
பிரிட்டனுக்கு உளவுபார்த்ததாக 5 பேரை சுட்டுக் கொலைசெய்து வீடியோ வெளியிட்டுஉள்ள ஐ.எஸ். தீவிரவாதிகள் ’கடும் தாக்குதல் நடத்துவோம்’ என்று பிரிட்டனுக்கு எச்சரிக்கை விடுத்து உள்ளனர். 10 நிமிடங்கள் ஓடும் வீடியோவில் இத்தகவல் டேவிட் கேமரூன் என்று கூறிஉள்ள ஐ.எஸ். தீவிரவாதிகள் பிரிட்டனில் தாக்குதல் நடத்தப்படும் என்று மிரட்டல் விடுத்து உள்ளனர் என்று செய்திகள் வெளியாகி உள்ளது. வீடியோவில் தோன்றும் சிறுவன், யார் என்று அடையாளம் காணப்படவில்லை. ஆனால் நம்பிக்கையில்லாதவர்களை கொலை செய்வதை குறித்து பேசுகின்றான் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதற்கிடையே வீடியோ தகவல்களை ஆய்வு செய்து வருவதாக பிரிட்டன் வெளியுறவுத்துறை தெரிவித்து உள்ளது.
விடியோவில் முகத்தை மறைத்துக் கொண்டு துப்பாக்கிஉடன் தோன்றும் ஜிகாதி, பிரிட்டன்மீது படை எடுப்போம் என்று மிரட்டல் விடுத்து உள்ளான். பிரிட்டனுக்கு உளவுபார்த்ததாக 5 பேரை பாலைவனப்பகுதியில் வைத்து பின்னால் நின்று சுட்டுக் கொலை செய்து உள்ளனர்.
வான்வழி தாக்குதல் நடத்துவதற்கு உதவியாக, ஐ.எஸ். தீவிரவாதிகள் இருக்கும் இடங்களை உளவுப்பார்த்து தகவல் அனுப்ப கேட்டு கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது. ஐ.எஸ். தீவிரவாதிகள் வெளியிட்டு உள்ள வீடியோவில் 7 வயதுடைய சிறுவன் ராணுவ சீருடையில் இருப்பது போன்ற காட்சியும் இடம்பெற்று உள்ளது. பிரிட்டனில் இருந்து ஜிகாதிகள் சிரியா மற்றும் ஈராக்கிற்கு சென்று போரிட்டு வருகின்றனர். ஏற்கனவே ஐ.எஸ். தீவிரவாதிகள் வெளியிட்ட வீடியோவில் இடம்பெற்று இருந்த பிரிட்டன் ஜிகாதி வான்வழி தாக்குதலில் கொல்லப்பட்டான்.
தொடர்ந்து சிரியா மற்றும் ஈராக்கில் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிரான வான்வழி தாக்குதலானது நடைபெற்று வருகிறது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply