வடமாகாண முதலமைச்சரின் செயற்பாடுகளை மிகவும் கவனமாக அவதானித்து வருகிறேன் : எதிர்கட்சி தலைவர் சம்பந்தன்

sampanthanஇனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு கிடைத்துள்ள இந்த அரியசந்தர்ப்பத்தை சிதைக்ககூடாது. அடாவடித்தனமான, இறுக்கமான, நிலைப்பாடுகள் உதவப்போவதில்லை, கடுமையான நிலைப்பாடுகளை முன்னெடுப்பதன் மூலம் நாட்டிற்கு கிடைத்துள்ள இந்த சந்தர்ப்பத்தினை பாழடிப்பது குறித்து எச்சரிக்கையாகயிருக்கவேண்டும்.தமிழ் தேசிய கூட்டமைப்பினால் நியமிக்கப்பட்டு தமிழரசுக்கட்சி வேட்பாளராக போட்டியிட்டு மக்களால் தெரிவுசெய்யப்பட்ட விக்னேஸ்வரன் கட்சியின் கொள்கைகளிற்கு கட்டுப்படவேண்டியவர்.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் கொள்கைகள் அதன் தேர்தல் விஞ்ஞாபனத்தில் காணப்படுகின்றன,அந்த கொள்கைகளே கட்சியினால் அனைத்து தேர்தல்களிலும் முன்வைக்கப்பட்டுள்ளன,அந்த கொள்கைகளின் அடிப்படையிலேயே விக்கினேஸ்வரன் தேர்தலில் போட்டியிட்டார்,முதலமைச்சரானார்.

தமிழ் மக்கள் பேரவையில் உள்ள தனிநபர்களால் முன்வைக்கப்பட்டுள்ள கொள்கைகள் கடந்த காலத்தில் மக்களால் நிராகரிக்கப்பட்டுள்ளன,எனினும் துரதிஸ்டசமாக விக்னேஸ்வரன் மக்களால் நிராகரிக்கப்பட்ட அந்த கொள்கைகளுடன் தன்னை அடையாளம் கண்டுள்ளார்,

இது ஏற்றுக்கொள்ள முடியாத விடயம்,இதனை கண்காணித்து வருகின்றோம் எனவும், வடமாகாண முதலமைச்சரின் செயற்பாடுகளை மிகவும் கவனமாக அவதானித்து வருவதாகவும் எதிர்கட்சி தலைவர் சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply