நான் அமெரிக்க அதிபரானால் ஐ.எஸ்.தீவிரவாதிகள் தலையை வெட்டுவேன்: வேட்பாளருக்கு போட்டியிடும் டிரம்ப் விளம்பரம்
அமெரிக்க அதிபரானால் ஐ.எஸ். தீவிரவாதிகளின் தலையை வெட்டுவேன்’ என வேட்பாளர் பதவிக்கு போட்டியிடும் டிரம்ப் விளம்பரம் செய்துள்ளார்.அமெரிக்காவில் இந்த ஆண்டு இறுதியில் அதிபர் தேர்தல் நடைபெறுகிறது. அதில் போட்டியிட ஆளும் ஜனநாயக கட்சி மற்றும் எதிர்க்கட்சியான குடியரசு கட்சி சார்பில் பலர் விருப்பம் தெரிவித்துள்ளனர். பொது மக்களிடம் கிடைக்கும் ஆதரவை பொறுத்தே வேட்பாளர்கள் தேர்வு நடைபெறும். எனவே, அமெரிக்காவில் பொது மக்களிடம் ஆதரவு திரட்டுவதில் வேட்பாளர் தேர்வில் இடம் பெற்றுள்ளவர்கள் தீவிரமாக உள்ளனர்.
வேட்பாளர் பதவிக்கு குடியரசு கட்சி சார்பில் கோடீசுவரரும், தொழில் அதிபருமான டொனால்டு டிரம்ப் போட்டியிருகிறார். அமெரிக்காவுக்குள் முஸ்லிம்கள் நுழைய தடை விதிக்க வேண்டும் என பேசி பெரும் சர்ச்சையையும் பரபரப்பையும் ஏற்படுத்தியவர்.
இவர் சமீபத்தில் லோவா மற்றும் ஹம்ப்ஷர் மாகாணத்தில் முதன்முறையாக டி.வி.விளம்பரம் வெளியிட்டார்.
அதில், ‘‘கலிபோர்னியாவில் நடந்த பயங்கரவாத தாக்குதல் விவரிக்கப்பட்டுள்ளது. மேலும், டிரம்ப் அமெரிக்காவின் அதிபரானால் ஐ.எஸ்.தீவிரவாதிகளின் தலையை வெட்டுவார். அவர்கள் வசம் உள்ள கச்சா எண்ணெய் வயல்களை கைப்பற்றுவார்’’ என அந்த விளம்பர படத்தில் பின்னணி பேசப்பட்டுள்ளது.
இந்த விளம்பரம் 30 வினாடிகள் ஒளிபரப்பாகிறது. அதற்காக ரூ. 14 கோடி செலவிடப்பட்டுள்ளது. இந்த டி.வி. விளம்பரம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply