தமிழக அரசின் மேலுமொரு தொகுதி நிவாரணப் பொருட்கள்: 15 ஆம் திகதிக்கு முன்னர் அனுப்பத் திட்டம்

வடக்கில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு மேலுமொரு தொகுதி உணவு மற்றும் அத்தியாவசியப் பொருட்களை தமிழக அரசு அனுப்பி வைக்கவுள்ளது.இந்த உணவுப் பொருட்கள் அடுத்த மாதம் 15 ஆம் திகதிக்கு முன்னர் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்படும்.
இலங்கைத் தமிழ் மக்களுக்கு உணவுப் பொருட்கள் வழங்குவது தொடர்பான ஆலோசனைக் கூட்டமொன்ற நேற்று தமிழக அரசின் தலைமைச் செயலாளர் கே.எஸ்.ஸ்ரீபதி தலைமையில் நடைபெற்றபோதே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டது.

அரிசி,பருப்பு,சர்க்கரை,தேயிலை,உடுதுணிகள், சவர்க்காரம், சமையல் பாத்திரங்கள் போன்றனவே அனுப்பி வைக்கப்படவுள்ளன.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply