வடகொரியா அணுகுண்டு சோதனை: ஐ.நா. பாதுகாப்பு சபை அவசரமாக கூடுகிறது

NORTH KOREAவடகொரியாவின் அணு பரிசோதனைக் கூடம் அருகே இன்று ‘திடீர்’ நிலநடுக்கம் ஏற்பட்டது. கில்ஜு நகரின் வடமேற்கே சுமார் 50 கிலோமீட்டர் தூரத்தில் புங்கேரி என்ற பகுதியில் அமைந்துள்ள அணு பரிசோதனை கூடத்தின் அருகே ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.1 ஆக பதிவானது. முன்னதாக, இது சாதாரண நிலநடுக்கம்தான் என வடகொரிய மக்கள் நம்பிவந்த நிலையில், வடகொரியா புதிதாக அணு குண்டை வெடித்து பரிசோதித்திருக்கலாம் என தென்கொரியா ராணுவ வட்டாரங்களும் ஜப்பானும் சந்தேகம் எழுப்பின.

இந்நிலையில், இந்த சந்தேகங்களுக்கு பதிலளிக்கும் விதமாக வட கொரியா, ஹைட்ரஜன் வெடிகுண்டை வெற்றிகரமாக பரிசோதித்துள்ளோம் என்று சற்றுமுன் தெரிவித்தது.

வடகொரியாவின் இந்த அசாத்தியமான துணிச்சல் உலக நாடுகளை நிமிர்ந்துப் பார்க்கும்படி செய்திருக்கும் நிலையில், இவ்விவகாரம் தொடர்பாக ஆலோசனை செய்வதற்காக ஐ.நா. பாதுகாப்பு சபையின் அவசரக் கூட்டம் புதன்கிழமை (அமெரிக்க நேரப்படி காலை 11 மணி – இந்திய நேரப்படி இன்றிரவு 9.30 மணிக்கு) நடைபெறுகின்றது.

ஐ.நா. பாதுகாப்பு சபையில் உறுப்பு நாடுகளான 15 நாடுகளின் பிரதிநிதிகள் மட்டும் பங்கேற்கும் இந்த கூட்டம் சாத்திய கதவுகளுக்குள் ரகசிய கூட்டமாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, சர்வதேச சமுதாயத்தால் தனிமைப்படுத்தப்பட்டுள்ள வடகொரியாவுக்கு எதிராக இந்த கூட்டத்தில் என்ன முடிவு எடுக்கப்படும்? என்பது மில்லியன் டாலர் கேள்வியாக உருவெடுத்துள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply