உரும்பிராய் பகுதியில் கைக்குண்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது

நேற்றிரவு இனந்தெரியாத ஆயுததாரிகளால் உரும்பிராய் பகுதியில் கைக்குண்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இரவு 8.00 மணியளவில் உரும்பிராய் மருதனார் மடத்திற்கு இடைப்பட்ட வீதியில் இந்தக் குண்டு வீச்சு இடம் பெற்றுள்ளது. மின்சாரம் துண்டிக்கப்பட்டு இருந்த வேளையில் பாரிய சத்தத்துடன் இரண்டு கைக்குண்டுகள் வெடித்ததைத் தொடர்ந்து பரவலாக துப்பாக்கிப் பிரயோகமும் இடம் பெற்றது.

இதனால் அந்தப் பகுதியில் பதற்றமான நிலைமை காணப்பட்டதுடன் பெருந்தொகையான இராணுவத்தினர் விரைந்து வந்து, வீதி போக்குவரத்தை கட்டுப்படுத்தினர். சோதனை நடவடிக்கையிலும் ஈடுபட்டனர். இந்தக் கைக்குண்டு வீச்சு சம்பவத்தில் ஏற்பட்ட சேதங்கள் தொடர்பான விபரம் எதுவும் இதுவரை தெரியவரவில்லை.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply