ஈரானுக்கான தூதரை திரும்ப அழைத்தது கத்தார்

Katar ஈரான் உடனான தூதரக உறவுகளை துண்டித்துக்கொள்ளும் விதமாக அந்நாட்டிற்கான தனது தூதரை திரும்ப அழைப்பதாக கத்தார் அறிவித்துள்ளது. முன்னதாக சவுதி அரேபியாவில், அரசுக்கு எதிராக போராட்டங்கள் நடத்தி வந்த, ஷியா பிரிவு மதகுரு உட்பட, 47 பேருக்கு, மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஈரான் தலைநகர் டெஹ்ரானில் உள்ள சவுதி தூதரகத்தின் மீது ஆர்ப்பாட்டக்காரர்கள் பெட்ரோல் குண்டு வீசி தாக்குதல் நடத்தினர். இது தொடர்பாக  44 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனை அடுத்து சவுதி தூதரகம் மீது தாக்குதல் நடத்தப்பட்டதை கண்டித்து ஈரான் உடனான தூதரக உறவுகளை துண்டித்துக்கொள்வதாக சவுதி அறிவித்தது. தற்பொது சவுதி ஆதரவு நாடான கத்தாரும் ஈரான் உடனான தூதரக உறவுகளை முறித்துக்கொள்வதாக அறிவித்துள்ளது.

 

இது தொடர்பாகா அந்நாட்டின் வெளியுறவு அமைச்சக இயக்குனர், காலித்- பின் இப்ராகிம் அல்-ஹாமர் வெளியிட்டுள்ள அறிகையில் “ ஈரான் தலைநகர் டெஹ்ரானில் உள்ள சவுதி தூதரகத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலை கண்டித்து ஈரானில் இருக்கும் கத்தார் தூதரை திரும்ப அழைத்துள்ளோம்.” என்று தெரிவித்துள்ளார்.

 

 

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply