1979-ம் ஆண்டு தொடங்கி 2015 வரை இஸ்ரோ 50 ராக்கெட்டுகளை விண்ணில் ஏவி சாதனை

isro இந்திய விண்வெளி ஆராய்ச்சி மைய (இஸ்ரோ) விஞ்ஞானிகள் சென்னையை அடுத்த ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ராக்கெட்டுகள் மூலம் செயற்கைகோள்களை விண்ணில் செலுத்தி வருகிறார்கள். இஸ்ரோ முதன் முதலாக எஸ்.எல்.வி-3 இ1 என்ற ராக்கெட்டை 1979-ம் ஆண்டு ஆகஸ்டு 10-ந்தேதி ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள தளத்தில் இருந்து விண்ணில் ஏவியது. ஆனால் துரதிர்ஷ்டமாக முதல் ராக்கெட் தோல்வியை தழுவியது. தொடர்ந்து கடந்த ஆண்டு டிசம்பர் 16-ந்தேதி வரை 50 ராக்கெட்டுகளை விண்ணில் ஏவி உள்ளது.

 

இதில் 7 ராக்கெட்டுகள் தவிர மீதம் உள்ள 43 ராக்கெட்டுகளும் கடந்த 1979-ம் ஆண்டில் இருந்து 2015-ம் ஆண்டு வரை வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.

 

இதற்கான வெற்றி விழா ஆந்திரா மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் நடந்தது. விழாவுக்கு இந்திய விண்வெளி ஆராய்ச்சி மைய தலைவர் ஏ.எஸ்.கிரண்குமார் தலைமை தாங்கினார். விஞ்ஞானிகள் அனைவரும் கவுரவிக்கப்பட்டனர்.

 

 

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply