வடகொரியா மீது புதிய பொருளாதார தடை – ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் நடவடிக்கை
ஹைட்ரஜன் குண்டு வெடித்த வடகொரியா மீது புதிய பொருளாதார தடை விதிக்க ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளது.வடகொரிய விவகாரம் குறித்து விவாதிப்பதற்காக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டம், நேற்று முன்தினம் இரவு நியூயார்க் நகரில் அவசர அவசரமாக கூட்டப்பட்டது. மூடிய அரங்கில் நடந்த இந்த கூட்டத்தில் வடகொரியாவின் ஆத்திரமூட்டும் நடவடிக்கைக்கு சீனா, ரஷியா, அமெரிக்கா ஆகிய வல்லரசு நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்தன. இந்த நாடுகள் கூட்டாக கூறும்போது, ‘‘வடகொரியாவின் செயல், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தீர்மானத்தை மீறிய செயல் என்பது தெளிவு’’ என்றனர்.
மேலும், வடகொரியாவுக்கு தண்டனை விதிக்கும் வகையில், புதிய பொருளாதார தடைகளை விதிக்கவும் இந்த கூட்டத்தில் பரிசீலிக்கப்பட்டது.
இது தொடர்பாக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தலைவர் எல்பியோ ரோசெல்லி விடுத்துள்ள அறிக்கையில், ‘‘வடகொரியாவுக்கு தண்டனை விதிக்கும் வகையில் தீர்மானம் தயாரிக்கும் பணி உடனடியாக தொடங்குகிறது’’ என குறிப்பிட்டுள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply