துப்பாக்கிகள் மௌனித்த நேரம் சமாதானப் பேச்சுக்களும் மெளனித்து விட்டன :கோபாலகிருஷ்ண காந்தி

KANTHIமுன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச புலிகளுடனான போரில் வென்றிருக்கலாம் ஆனால் போரின்போது மேற்கொண்ட குற்றங்களை மறைக்க முடியாது. இந்த வெற்றியின் மூலம் துப்பாக்கிகள் மௌனமாகிய அதேநேரம் சமாதானப் பேச்சுக்களும் மெளனமாகி விட்டன இவ்வாறு தெரிவித்தார் இந்தியாவின் தேசபிதா மகாத்மா காந்தியின் பேரனான கோபாலகிருஷ்ண காந்தி.மைத்திரிபால சிறிசேன பதவியேற்று ஓர் ஆண்டு பூர்த்தி விழா நேற்று கொழும்பில் இடம்பெற்றது. அதில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,

பிரபாகரன் வரலாற்றில் இடம்பிடித்து விட்டார். அவரது குறிக்கோளும் வரலாற்றில் இடம்பெற்றுவிட்டது. வேலுப்பிள்ளை பிரபாகரனின் குழந்தை என்பதற்காக கொடிய முறையில் அந்தக் குழந்தை கொல்லப்பட்டுள்ளது. அக்குழந்தை பயங்கரமான முறையில் இந்த உலகத்தை விட்டு சென்றுள்ளது. பிரபாகரனின் குறிக்கோள் தற்போதைய நிகழ்ச்சி நிரலில் இருந்து வெளியேறியுள்ள போதும் நிரந்தரமாக வெளியேறவில்லை.

சிங்கள, தமிழ் இனவாதங்களை நான் எதிர்க்கிறேன். அனைத்து சமூகத்தவர்களுக்கும் நம்பிக்கை உறுதிப்படுத்தப்பட வேண்டும். இந்நிலையில் தற்போதைய ஆட்சியின் கீழ் இலங்கை நல்லிணக்க நாடாக மாறும் என்றார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply