ஊடகவியலாளர்கள் படுகொலை; விசாரணைகளை விரைவுபடுத்துக : ஐ.நா
இலங்கையில் கடந்த காலங்களில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் தொடர்பிலான விசாரணைகளை இலங்கை அரசாங்கம் விரைவுபடுத்தி பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் பெற்றுக் கொடுக்க வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபை மீண்டும் வலியுறுத்தியுள்ளது.ஐ.நா பேச்சாளர் ஸ்டீபன் டுஜாரிக் இந்த வலியுறுத்தலை விடுத்துள்ளார்.கடந்த காலங்களில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் மீதான துன்புறுத்தல்கள் தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
கடந்த 7 வருடங்களுக்கு முன்னர் படுகொலை செய்யப்பட்ட சண்டே லீடர் பத்திரிகையின் முன்னாள் ஆசிரியரும், மூத்த ஊடகவியலாளருமான லசந்த விக்கிரமதுங்கவின் விசாரணைகளின் தாமதம் குறித்தும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
இலங்கையில் ஊடகவியலாளர்கள் படுகொலை மற்றும் ஊடகவியலாளர்கள் மீதான துன்புறுத்தல்கள் இடம்பெற்றிருப்பதை அறிவதோடு, அவை நிறுத்தப்பட வேண்டும். நீதி பெற்றுக்கொடுக்க வேண்டும் என அவர் கூறியுள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply