அமெரிக்க அதிபர் ஒபாமாவின் செல்ல நாயை கடத்த முயற்சி: வாலிபர் கைது
அமெரிக்க அதிபர் ஒபாமா போர்ச்சுக்கல் நாட்டை சேர்ந்த 2 நாய்க்குட்டிகளை வளர்த்து வருகிறார். அவற்றுக்கு ‘போ’ மற்றும் ‘சன்னி’ என பெயரிடப்பட்டுள்ளது.அவை ஒபாமா, அவரது மனைவி மிச்செலி மற்றும் மகள்களுடன் மிகவும் பிரியமாக பழகுகின்றன. அவற்றை மிச்செலி பாசத்துடன் வாக்கிங் அழைத்து செல்வார். இந்த நிலையில் அந்த நாய்க்குட்டிகளில் ஒன்றை கடத்த வாலிபர் ஒருவர் திட்டமிட்டார். அதற்காக மிச்செலி நாய்க் குட்டிகளை வெளியே ’வாக்கிங்’ அழைத்து வருவதை கண்காணித்து வந்தார்.இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் காருடன் நின்று கொண்டிருந்த வாலிபரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவரது பெயர் ஸ்காட் ஸ்டாக்கெர்ட் என தெரிய வந்தது.
வடக்கு டகோடா மாகாணத்தை சேர்ந்தவன். இவன் சிறிய ரக கைத்துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள் வைத்து இருந்தான். ஒபாமாவின் நாய்களில் ஒன்றை கடத்த திட்டமிட்டதாக கூறினான். எனவே அவனை போலீசார் கைது செய்தனர்.
விசாரணையின் போது சம்பந்தமில்லாமல் ஏதோதோ தெரிவித்தான். முன்னாள் அதிபர் ஜான் எல்.கென்னடி மற்றும் நடிகை மர்லின் மன்றோவின் மகன் என்று கூறினான். அதிபர் தேர்தலில் போட்டியிட போவதாகவும் தெரிவித்தான்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply