தண்டனையை ரத்து செய்யக் கோரிய எகிப்து முன்னாள் அதிபர் முபாரக்கின் மனு தள்ளுபடி

mufarak 16சிறை தண்டனையை நீக்க கோரி தாக்கல் செய்த எகிப்து முன்னாள் அதிபர் ஹோஸ்னி முபாரக் மற்றும் அவரது இரண்டு மகன்களின் மனுக்களை அந்நாட்டு நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. எகிப்து அதிபர் மாளிகையின் புனரமைப்பு பணிக்காக ஒதுக்கப்பட்ட 1 கோடியே 31 லட்சம் ரூபாய் கையாடல் செய்ததாக ஹோஸ்னி முபாரக் மற்றும் அவரது இரண்டு மகன்கள் ஆகியோர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இதுதொடர்பான வழக்கு விசாரணை கெய்ரோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. அதில் முபாரக்கிற்கு 3 ஆண்டு சிறை தண்டனையும், அவரது மகன்களான அல்லா முபாரக் மற்றும் கமல் முபாரக்கிற்கு தலா 4 ஆண்டு சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது. மேலும், 1 கோடியே 28 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது. இதை எதிர்த்து முபாரக் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

 

ஆனால், முபாரக்கிற்கு விதிக்கப்பட்ட 3 ஆண்டு சிறை தண்டனையை மேல்நீதிமன்றமும் உறுதி செய்தது. அதேபோல், இவ்வழக்கை விசாரித்த கெய்ரோ நீதிமன்றம், அவரது தண்டனையை உறுதி செய்தது. இதனையடுத்து எகிப்தின் மிக உயரிய நீதிமன்றத்தில் விடுதலை கோரி முபாரக் மனு தாக்கல் செய்தார்.

 

முன்னதாக, விசாரணையின் போதே அவரது 3 ஆண்டு கால சிறை தண்டனை கழிந்துவிட்டதை அடுத்து முபாரக்கின் மகன்கள் கடந்த மே 2015-ம் ஆண்டு விடுதலை செய்யப்பட்டனர். ஆனால் முபாராக் ராணுவ மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். முபாரக் தனது தண்டனை காலத்தில் பெரும்பாலான நாட்கள் ராணுவ மருத்துவமனையில் கழித்து வந்துள்ளார். தற்பொழுதும் அங்குதான் உள்ளார்.

 

இந்நிலயிலையில் தான் முபாரக் தாக்கல் செய்த மனுவை அந்நாட்டின் உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. அதனால் அவரது தண்டனை காலம் முடிவடையவில்லை என்று நீதிமன்றம் கூறியுள்ளது. மேலும் அவர் எவ்வளவு காலம் சிறையில் இருக்க வேண்டும் என்று இன்னும் கூறப்படவில்லை.

 

முன்னதாக, எகிப்தை 30 ஆண்டு காலம் ஆட்சி செய்த ஹோஸ்னி முபாரக்குக்கு எதிராக கடந்த 2011-ம் ஆண்டு ஜனவரி மாதம் முபாரக் ஆட்சிக்கு எதிராக மக்கள் புரட்சி வெடித்தது குறிப்பிடத்தக்கது.

 

 

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply