சிரியாவில் அல்கொய்தா தீவிரவாதிகளின் சிறை மீது வான்வெளி தாக்குதல்: 39 பேர் பலி

suriya சிரியாவில் அல்கொய்தாவின் கூட்டு அமைப்பின் சிறைக் கூடம் மீது நடத்தப்பட்ட வான்வெளி தாக்குதலில் 39 பேர் கொல்லப்பட்டனர். பிரிட்டனை மையமாக கொண்ட சிரியா மனித உரிமைகள் கண்காணிப்பு கூடம் இந்த தகவலை தெரிவித்துள்ளது. இஸ்லாமிய நீதிமன்றம் உள்ளிட்ட பல இடங்களில் போர் விமானங்கள் மூலம் நான்கு ஏவுகணைகள் தாக்குதல் நடத்தியுள்ளதாக அந்த கண்காணிப்பு மையம் தெரிவித்துள்ளது. சிறைச்சாலை மற்றும் நீதிமன்றத்துடன் இணைந்த மார்க்கெட் சாலை ஆகியவை ஏவுகணை தாக்குதலுக்கு உட்பட்ட இடங்களாகும்.

 

இருப்பினும் இந்த தாக்குதலில் 51 பேர் கொல்லப்பட்டதாக உள்ளூர் ஒருங்கிணைப்பு குழுக்கள் மற்றும் மற்றொரு ஆர்வலர் குழு கூறியுள்ளது. மேலும் ஒரு குழந்தை உட்பட 5 பொதுமக்கள் இந்த தாக்குதலில் கொல்லப்பட்டனர்.

 

ரஷ்யா தலைமையிலான கூட்டுப்படை இந்த தாக்குதலை நடத்தியதாக கூறப்படுகிறது.

 

 

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply