தமிழ் மக்கள் பேரவை தொடா்பாக ஜனாதிபதி அவதானிப்பு; ரணிலுக்கும் விளக்கம்
யாழ்ப்பாணத்தில் உருவாக்கப்பட்ட தமிழ் மக்கள் பேரவை தொடர்பாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நிதானமாக அவதானித்து வருவதாக அமைச்சரவைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.பேரவையினால் பாதிப்பு இல்லையென ஜனாதிபதி கூறியபோதும் புதிய அரசியல் யாப்பு உருவாக்க விடயத்தில் பேரவை உறுப்பினர்களின் செயற்பாடுகள் எவ்வாறு அமைகின்றன என்பது தொடர்பாக ஆராய்ந்து வருவதாகவும் கூறப்படுகின்றது.தமிழ் மக்களின் பெரும்பான்மை ஆதரவைப் பெற்ற தமிழ்த் தேசிய கூட்டமைப்பு அரசியல் ரீதியாக செயற்படும்போது தமிழ் மக்கள் பேரவை உருவாக்கப்பட்டதன் பின்னணி தொடர்பாக ஜனாதிபதி ஆராய்ந்து வருவதாகவும், இது தொடர்பாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் மூத்த உறுப்பினர் ஒருவரிடம் ஜனாதிபதி தொலைபேசியில் பேசினார் எனவும் அமைச்சரவைத் தகவல்கள் கூறுகின்றன.
வடமாகாண முதலமைச்சர் எந்த அடிப்படையில் தமிழ் மக்கள் பேரவையின் இணைத் தலைவராக செயற்படுகின்றார் என்றும் வடமாகாண சபையின் செயற்பாடுகள் குறித்து ஜனாதிபதி சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகளுடன் உரையாடினார் எனவும் கூறப்படுகின்றது.
இதேவேளை தமிழ் மக்கள் பேரவையின் செயற்பாடுகளில் தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கும் வடமாகாண சபைக்கும் எந்தவிதமான தொடர்புகளும் இல்லை என இலங்கைத் தமிழிழரசுக் கட்சியின் மூத்த உறுப்பினா் ஒருவர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் விளக்கமளித்தார் என்றும் மற்றுமொரு தகவல் தெரிவிக்கின்றது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply