புலிகளுக்கு பொதுமன்னிப்பு கொடுத்து வருவதும் இந்த நல்லாட்சியின் ஒரு எடுத்துக்காட்டு : மஹிந்த ராஜபக்ச
பாராளுமன்றத்தில் உள்ள அனைத்து கட்சிகளுமே ஆளும் கட்சிக்காக மாறியுள்ள நிலையில் கட்டாயமான எதிர்க்கட்சி ஒன்று தேவைப்படுகின்றது. ஆனால் அவ்வாறான ஒரு நிலைமை இல்லாது அரசாங்கத்தின் அனைத்து குற்றங்களுக்கும் துணைபோகும் வகையில் எதிர்க்கட்சிகள் செயற்பட்டு வருகின்றது.இன்று நாட்டை சரியான பாதியில் கொண்டு செல்லும் கட்சி ஒன்றை மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கொள்கையையும், தனித்துவத்தையும் அழிக்கும் வகையில் ஒரு சிலர் செயற்பட்டு வருகின்றனர். அதேபோல் நாட்டை வழிநடத்த வேண்டுமாயின் ஒரு தலைமையில் கீழேயே அது சாத்தியமாகும். இரண்டு தலைவர்கள் ஒன்றிணைந்து நாட்டை வழிநடத்த முடியாது. இரண்டு மாறுபட்ட கொள்கையுள்ள கட்சிகளினால் ஒன்றிணைந்து நாட்டை சரியான பாதையில் வழிநடத்த முடியாது.
ஆகவே நாட்டின் தலைவர் ஒருவராக மட்டுமே இருக்க முடியும். அதற்கான மாற்றத்தை மக்கள் ஏற்படுத்த வேண்டும். விடுதலைப் புலிகளை விடுதலை செய்வதும் எமது இராணுவத்தை தண்டிக்க வேண்டும் என்பதே இன்றைய அரசாங்கத்தின் நிலைப்பாடாக உள்ளது. அரசாங்கத்தின் தேவையும் அதுவாகவே உள்ளது.
ஆகவே சர்வதேச நாடுகளையும் புலம்பெயர் அமைப்புகளையும் திருப்திப்படுத்த வேண்டுமாயின் அவ்வாறான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டிய நிலைமை அரசாங்கத்திற்கு உள்ளது. ஆகவே அதற்கமைய நடக்கின்றது. நல்லாட்சி என்ற மாற்றமும் அதற்காகதானே ஏற்பட்டது. ஆகவே இந்த விடயத்தில் ஆச்சரியமடைய தேவையில்லை.
அதேபோல் இப்போது ஜனாதிபதி புலிகளுக்கு பொதுமன்னிப்பு கொடுத்து வருவதும் இந்த நல்லாட்சியின் ஒரு எடுத்துக்காட்டு என்றார்.முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply