2030–ம் ஆண்டிற்குள் சந்திரனில் கிராமங்கள் உருவாக்கப்படும்: விஞ்ஞானிகள் உறுதி

moonபூமியை தொடர்ந்து செவ்வாய் உள்ளிட்ட மற்ற கிரகங்களில் மனிதர்களை குடியமர்த்தும் முயற்சி நடைபெற்று வருகிறது. அதற்கு முன்னதாக சந்திரனில் மக்களை குடியமர்த்தும் நடவடிக்கைகள் தொடங்கி விட்டன.ஏற்கனவே சந்திரனுக்கு மனிதர்கள் சென்று கால் பதித்து விட்டனர். அதன் அடிப்படையில் அங்கு புதிய கிராமங்களை உருவாக்க விஞ்ஞானிகள் தீவிரமாக ஆலோசித்து வருகின்றனர்.சமீபத்தில் ஐரோப்பிய யூனியன் ஏஜென்சி சந்திரன் 2020–2030 என்ற தலைப்பில் கருத்தரங்கு நடத்தியது. அதில் விஞ்ஞானிகளும், தொழில் நுட்ப வல்லுனர்களும் கலந்து கொண்டனர்.

அப்போது பேசிய விஞ்ஞானிகள் மற்றும் தொழில் நுட்ப கல்லூரிகள், வருகிற 2030–ம் ஆண்டிற்குள் சந்திரனில் கிராமங்கள் உருவாக்கப்படும். அதற்கான உறுதியான நடவடிக்கைகள் மேற் கொள்ளப்படும் என உறுதி அளித்தனர்.அதற்கான பரீட்சார்ந்த பரிசோதனைகள் மற்றும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட உள்ளது என்றனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply