ஜல்லிக்கட்டு போட்டிக்கு எதிரான மனு: உச்சநீதிமன்றத்தில் வேறு அமர்வுக்கு மாற்றம்

jallikaddu ஜல்லிக்கட்டு போட்டிக்கு எதிராக விலங்குநல வாரியம் உள்ளிட்ட தரப்பினர் சார்பில் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுக்கள் மீதான விசாரணை வேறு அமர்வுக்கு மாற்றப்பட்டுள்ளது. காட்சிப்படுத்தப்படும் விலங்குகள் பட்டியலில் உள்ள காளையை நிபந்தனையுடன் ஜல்லிக்கட்டு போட்டியில் ஈடுபடுத்த வகை செய்யும் அரசாணையை மத்திய அரசு கடந்த 8ஆம் தேதி வெளியிட்டது. மத்திய அரசு வெளியிட்ட இந்த அரசாணைக்கு எதிராக விலங்குகள் நல வாரியம் உள்பட 13 பேர் சார்பில் உச்சநீதிமன்றத்தில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. இதனையடுத்து இந்த மனுக்கள் மீதான விசாரணை இன்று நடைபெறவிருந்தது. நீதிபதி தாக்கூர் தலைமையிலான அமர்வு இந்த மனுவை விசாரணை செய்ய இருந்தது.

 

இந்நிலையில், ஜல்லிக்கட்டுக்கு எதிரான மனுக்கள் மீதான விசாரணை நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, என்.வி.ரமணா ஆகியோர் அடங்கிய அமர்வுக்கு மாற்றப்பட்டுள்ளது.

 

இந்த மனுக்கள் இன்னும் சில நிமிடங்களில் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்படும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

 

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply