ஜப்பான் நாட்டின் போர்க்கப்பல் சென்னை வந்தது: 15-ந் தேதி வரை கூட்டு பயிற்சி
இந்தியா மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு இடையே நல்லுறவை பேணிக்காக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டின் தொடக்கத்திலும் ஜப்பான் நாட்டில் இருந்து போர்க்கப்பல் சென்னைக்கு வந்து, கூட்டு பயிற்சியில் ஈடுபடுவது வழக்கம்.
15-வது வருடமாக ஜப்பான் நாட்டின் ‘இச்சிகோ பி.எல்.எச்-08’ எனும் கடற்படை போர்க்கப்பல் சென்னைக்கு நேற்று முன்தினம் வந்தடைந்தது.
ஜப்பான் போர்க்கப்பலுடன் இணைந்து, இந்திய கடலோர காவல்படைக்கு சொந்தமான ‘சமுத்ரா’, ‘ராஜ்கமல்’, ‘ராஜ்தரங்க்’, ‘ஹோவர்ஹர்ட்’, ‘சி௪17’, ‘சி௪15’, ஒரு ‘டோர்னியர்’ விமானம் மற்றும் ஒரு ‘சீட்டா’ ஹெலிகாப்டரும் கூட்டு பயிற்சியில் ஈடுபட உள்ளன. கடல்வழியாக தீவிரவாதிகள் ஊடுருவதை எப்படி தடுப்பது? கடற்படை பாதுகாப்பு, ஒரு கப்பலில் இருந்து இன்னொரு கப்பலுக்கு எந்திரங்களை மாற்றுவது உள்ளிட்ட பல்வேறு பயிற்சியில் இரு நாட்டு வீரர்களும் ஈடுபட உள்ளனர்.
15-ந் தேதி வரை சென்னை துறைமுகத்தில் இருந்தபடி கூட்டு பயிற்சியில் ஈடுபடுவார்கள்.
15-ந் தேதி சென்னை துறைமுகத்தில் இருந்து குறிப்பிட்ட நாட்டிக்கல் தொலைவில் கடலில் சாகச நிகழ்ச்சி நடக்கிறது. இதில் ஜப்பான் போர்க்கப்பலோடு இணைந்து இந்தியாவின் போர்க்கப்பல்களும் பங்கேற்கின்றன. இரு நாட்டு வீரர்களும் பல்வேறு சாகசங்களை நிகழ்த்த உள்ளனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply