தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நம்பிக்கையை அரசாங்கம் வீணடித்து விடக்கூடாது :அமைச்சர் மனோ

manoபாரா­ளு­மன்­றத்தில் நேற்று செவ்­வாய்க்­கி­ழமை இடம்­பெற்ற புதிய அர­சி­ய­ல­மைப்பு தொடர்பில் பாரா­ளு­மன்­றத்தை அர­சி­ய­ல­மைப்பு நிர்­ணய சபை­யாக மாற்­றி­ய­மைத்தல் தொடர்­பான தீர்­மா­னத்தின் மீதான விவா­தத்தில் கலந்து கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே மேற்­கண்­ட­வாறு அமைச்சர் மனோ தெரி­வித்தார்.

அமைச்சர் மனோ இங்கு மேலும் கூறு­கையில்;

தமிழ் மக்கள் எதிர்­கொண்­டுள்ள பிரச்­சி­னை­களை தீர்த்து வைப்­ப­தற்கு முன்­னைய தலை­வர்கள் பலரும் பல சந்­தர்ப்­பங்­க­ளிலும் முயற்­சித்த போதிலும் சந்­தர்ப்­பங்கள் தவ­ற­வி­டப்­பட்­டி­ருந்­தது வர­லா­றாகும்.

வடக்கு கிழக்கு தெற்கு ஆகிய பிர­தே­சங்­களே சந்­தர்ப்­பங்­களை தவ­ற­விட்­டன என்று குற்­றங்­களை சுமத்திக் கொண்­டி­ருப்­பதை விடுத்து அதற்­கான பொறுப்­புக்­களை அனை­வரும் ஏற்றக் கொள்ள வேண்­டி­ய­வர்­க­ளாக இருக்­கிறோம்.

இன்­றைய நிலையில் எமது நாட்டில் யுத்தம் இல்லை. இன­வாதம் மத­வாதம் இல்லை. பயங்­க­ர­வா­தமும் இல்லை. அரச பயங்­க­வா­தமும் இல்லை.

நிறை­வேற்று அதி­கா­ரத்தை இல்­லா­தொ­ழிக்கும் எண்ணம் எம்­மிடம் இருக்­க­வில்லை. தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­புக்கோ, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்­கி­ர­ஸுக்கோ தமிழ் முற்­போக்கு கூட்­ட­ணிக்கோ அப்­ப­டி­யான எண்ணம் இருக்­க­வில்லை. நிறை­வேற்று அதி­கார முறைமை இருக்கும் பட்­சத்­தி­லேயே பேரம் பேசும் நிலையும் இருக்­கின்­றது.

ஏற்­ப­டுத்­தப்­பட்­டுள்ள ஆட்­சிக்கு தமிழ் மக்­களும் முஸ்லிம் மக்­களும் இணைந்து வாக்­க­ளித்­தனர். இப்­படி அவர்கள் வாக்­க­ளித்­த­மை­யா­னது சிங்­கள மக்­களின் உரி­மை­களைப் பறித்­தெ­டுப்­ப­தற்­காக அல்ல என்­பதைப் புரிந்து கொள்ள வேண்டும். அனை­வரும் ஒன்­றி­ணைந்து நல்­லி­ணக்­கத்­துடன் வாழ வேண்டும் என்­ப­தற்­காக தமி­ழர்­களும் முஸ்­லிம்­களும் வாக்­க­ளித்­தி­ருந்­தனர்.

அர­சாங்­கத்தின் ஒற்­றை­யாட்­சிக்குள் நல்­லி­ணக்­கத்­துடன் வாழ வேண்டும் என்­ப­தற்­கா­கவே தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு இறங்கி வந்து ஆத­ர­வ­ளித்து செயற்­ப­டு­கி­றது.

வடக்கு கிழக்கில் மீண்டும் ஒரு யுத்தம் ஏற்பட்டு விடக்கூடாது. அவ்வாறான நிலைக்கு தள்ளப்பட்டு விடவும் கூடாது. அதே நேரம் நம்பிக்கையுடன் இணைந்து செயற்படுவதற்கு முன்வந்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நம்பிக்கையை அரசாங்கம் வீணடித்து விடக்கூடாது என்றார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply