வடகொரியாவின் அணு ஆயுத பரிசோதனைக்கு சீனா தகுந்த முறையில் பதிலடி தரவேண்டும்: தென் கொரியா அதிபர் கோரிக்கை
பல்லாயிரம் உயிர்களை ஒரேநேரத்தில் அழிக்கக்கூடிய ஆற்றல் கொண்ட ஹைட்ரஜன் குண்டை கடந்த ஆறாம் தேதி வெடித்து பரிசோதித்ததுடன் வடகொரியாவின் அணு ஆயுத பலத்தை மேலும் விரிவுப்படுத்துவோம் என அந்நாட்டின் அதிபர் கிம் ஜாங் உன் அறிவித்துள்ள நிலையில் வடகொரியாவின் அணு ஆயுத பரிசோதனைக்கு சீனா தகுந்த முறையில் பதிலடி தரவேண்டும் என்று தென் கொரியா அதிபர் பார்க் கியுன்-ஹ்யே கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக, தலைநகர் சியோலில் செய்தியாளர்களுக்கு இன்று பேட்டியளித்த பார்க், ‘சைபர் தீவிரவாதம் உள்ளிட்ட அத்துமீறல்களில் வடகொரியா தொடர்ந்து ஈடுபடுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் உள்ளன. எனவே, வடகொரியாவின் அணு ஆயுத பரிசோதனைக்கு தகுந்த முறையில் பதிலடி தரும் வகையில் ஐ.நா. பாதுகாப்பு சபையின் நிரந்தர உறுப்பினர் என்ற முறையில் செயலாற்ற சீனா முன்வர வேண்டும்’ என குறிப்பிட்டுள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply