ஆந்திராவில் செய்வினை செய்வதாக கணவன்– மனைவியை எரித்து கொன்ற கிராம மக்கள்

anthira ஆந்திர மாநிலம் விஜய நகரம் மாவட்டம் பெத்த வலசா கிராமத்தில் ஆதி வாசிகள் குடியிருக்கிறார்கள். இந்த கிராமத்தைச் சேர்ந்த கொல்லூரி பண்டு (40), சீத்தம்மா (35) தம்பதிகள் தங்களது வீட்டில் பூஜைகள் நடத்துவது உண்டு.இந்த தம்பதிக்கும் அதே கிராமத்தைச் சேர்ந்த பன்னிசீனு என்பவருக்கும் இடையே கடந்த 7–ந்தேதி தகராறு ஏற்பட்டது. மறுநாள் பன்னிசீனு கால்தடுக்கி கீழே விழுந்து பலியானார்.இதேபோல் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சாரம்மா என்ற மூதாட்டியும் இந்த தம்பதிகளுடன் தகராறு செய்த சில நாளில் இறந்து போனார்.இவர்களின் சாவுக்கு கொல்லூர் பண்டுவும், அவரது மனைவி சித்தம்மாவும் தனது வீட்டில் நடத்திய செய்வினை பூஜையே காரணம் என்று ஊர் மக்கள் கருதினார்கள். 

இது குறித்து அவர்கள் பஞ்சாயத்தை கூட்டி முறையிட்டனர்.செய்வினை தம்பதிகளை ஊரை விட்டு வெளியேற பஞ்சாயத்து உத்தரவிட்டது. ஆனால் அவர்கள் வெளியேற மறுப்பு தெரிவித்தனர்.இதனால் ஆவேசம் அடைந்த பன்னிசீனுவின் உறவினர்கள் கும்பலாக வந்து பண்டு, சித்தம்மாவை வீடு புகுந்து தாக்கினார்கள். பின்னர் 2 பேரையும் வெட்டி கொலை செய்தனர்.அதோடு விடவில்லை. 2 பேரின் பிணத்தையும் ஒரு பாறை மீது வைத்து எரித்தனர். அவர்களது சாம்பல் கூட கிராம மண்ணில் விழக்கூடாது என்று எண்ணி எரிக்கப்பட்ட அவர்களின் சாம்பலை அள்ளி நதி தீரில் கரைத்தனர்.இந்த சம்பவம் குறித்து பண்டுவின் ஒரே மகள் சூரம்மா. விஜயநகரம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து நதி நீரில் கரைக்கப்பட்ட எலும்பு கூடுகளை கண்டுபிடித்தனர். 2 பேரையும் கொன்ற குற்றவாளிகள் தலைமறைவாகி விட்டனர். அவர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

 

 

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply