திருத்தங்களை உள்ளடக்கி இணக்கப்பாட்டுடன் நிறைவேற்ற அரசு முடிவு :அமைச்சர் ராஜித சேனாரத்ன

RAJITHAபாராளுமன்றத்தை அரசியலமைப்பு சபையாக மாற்றுவது தொடர்பான பிரேரணையை சகல தரப்பினரதும் திருத்தங்களை உள்ளடக்கி இணக்கப்பாட்டுடன் நிறைவேற்ற எதிர்பார்ப்பதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார். சமஷ்டி முறையா அல்லது ஐக்கிய இலங்கையா என்பது குறித்து யாப்பு திருத்தம் தொடர்பான ஆராய்வின் போதே முடிவு செய்யப்படும் என்று தெரிவித்த அமைச்சர்,நாட்டை துண்டு போடாது தேசிய பிரச்சினைக்கு தீர்வு காண்பது குறித்தே ஆராயப்படுவதாகவும் குறிப்பிட்டார்.

அமைச்சரவை முடிவுகளை ஆராயும் ஊடக மாநாட்டில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளித்த அமைச்சர்,பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள பிரேரணையில் தேசிய பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்பதற்காகவும் இந்த யாப்புத் திருத்தம் மேற்கொள்ளப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்த பிரிவை அகற்றுமாறு சில தரப்பினர் கோரியுள்ளனர். ஆனால் இந்தப் பிரிவை அகற்ற முடியாது எனவும் யாப்பு திருத்தத்தில் அது முக்கிய அம்சமாகும் எனவும் அவர் கூறினார்.

மேலும் கருத்துத் தெரிவித்த அமைச்சர்,

9 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரணை அமைச்சரவையின் அனுமதியுடனே சமர்ப்பிக்கப்பட்டது. 26 ஆம் திகதி இதனை ஒன்றிணைந்த எதிர்க்கட்சி மற்றும் எதிர்க்கட்சி என்பவற்றின் திருத்தங்களையும் உள்ளடக்கி நிறைவேற்ற எதிர்பார்க்கிறோம். இது அரசியலமைப்பு திருத்தமல்ல.அரசியலமைப்பு திருத்தத்திற்காக முறைமை யொன்றை ஏற்படுத்தவே இந்த ஏற்பாடு செய்யப்படுகிறது.

தேசிய பிரச்சினைக்கு முன்னர் ஆயுதம் மூலமே தீர்வு காண்பதற்கு முயற்சி செய்யப்பட்டது.நாகரிக உலகில் அந்த நிலை மாறி நாட்டை துண்டாடாது பிரச்சினைக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படுகிறது.ஜக்கிய ,பெடரல் என அதிகாரத்தை பகிரும் எல்லைகளை வரையறுக்க முடியாது. நமது மாகாண சபை முறையைக் கூட பெடரல் என்று குறிப்பிடுகின்றனர்.

அசே உருவாக்கப்பட்ட போது தனியான தேசிய கொடி தனினயான தேசிய கீதம் மட்டுமன்றி தனியான பாராளுமன்றம், நீதிமன்றம் என்பனவும் அமைக்கப்பட்டன. இதனை ஜக்கிய என்றே காண்பித்தனர். ஆனால் பிரபாகரன் தனியான தேசிய கொடியோ தேசிய கீதமோ கோரவில்லை.

இன்று பெடரல் குறித்து ஜீ.எல் பீரிஸ் குற்றஞ் சாட்டி வருகிறார். அவர் கேட்டவாறு அமைச்சுப்பதவி வழங்கியிருந்தால் அவர் சார்பாக பேசியிருப்பார். இவர் காலத்துக்குக் காலம் ஒவ்வொரு நிலைப்பாட்டுடன் இருக்கிறார். அமைச்சராக இருந்த போது சுவிஸ்,பெல்ஜியம் என பல நாடுகளுக்கு சென்று வந்தார்.

முன்னர் சிறுபான்மையினருக்காக குரல் கொடுத்த சமசமாஜ கட்சி பெடரலை எதிர்ப்பதாக கூறிகிறது. ஆனால் திஸ்ஸ விதாரணவின் சர்வ கட்சி குழு அறிக்கையில் வடக்கு கிழக்கை இணைப்பது குறித்தும் கவனம் செலுத்த முடியும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது என்றார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply