மலேசியாவில் ஐ.எஸ். இயக்கத்துடன் தொடர்பு வைத்திருந்த தீவிரவாதிகள் ஆயுதங்களுடன் கைது
இந்தோனேசியா தலைநகரான ஜகர்தாவில் நேற்று முன்தினம் ஐ.எஸ். தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் ஏழுபேர் பலியானதையடுத்து அண்டை நாடுகளான சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.இந்நிலையில், மலேசிய தலைநகரான கோலாலம்பூரில் உள்ள ஜெலாடிக் பகுதி ரெயில் நிலையத்தில் சந்தேகத்துக்குரிய வகையில் திரிந்து கொண்டிருந்த ஒருவனை போலீசார் நேற்று கைது செய்தனர்.
ஐ.எஸ். தீவிரவாதிகளுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்ததற்கான ஆதாரங்களும், ஆயுதங்களும் அவனிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்த கோலாலம்பூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெனரல் காலித் அபூபக்கர், பிடிபட்ட தீவிரவாதியிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் கூறியுள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply