பாகிஸ்தான் ராணுவ மந்திரியின் ஈரான் பயணம் திடீர் ரத்து
பாகிஸ்தான் ராணுவ மந்திரி கவாஜா ஆசிப். இவர் ஈரான் நாட்டுக்கு நாளை (திங்கட்கிழமை) முதல் 2 நாட்கள் அரசு முறைப்பயணம் மேற்கொள்ள இருந்தார். ஆனால் அவர் தனது பயணத்தை திடீரென ரத்து செய்து விட்டார். அதற்கான காரணம் அறிவிக்கப்படவில்லை.இருப்பினும் சவுதி அரேபியாவுக்கும், ஈரானுக்கும் இடையே பதற்றமான சூழல் நிலவுவதால்தான் கவாஜா ஆசிப் தனது பயணத்தை ரத்து செய்துள்ளார் என பாகிஸ்தான் ராணுவ அமைச்சக வட்டாரங்கள் கூறுகின்றன.
சவுதி அரேபியாவின் வெளியுறவு, ராணுவ மந்திரிகள் ஒருவர் பின் ஒருவராக சமீபத்தில் பாகிஸ்தான் பயணம் மேற்கொண்டதும், தீவிரவாதத்துக்கு எதிரான 34 நாடுகள் கூட்டணியில் சேருமாறு பாகிஸ்தானை அவர்கள் வலியுறுத்தியதாகவும், அந்த அழைப்பை பாகிஸ்தான் நிராகரித்து விட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
இருந்தபோதிலும் பிராந்தியத்தின் ஸ்திரத்தன்மைக்கு ஒரு ஆபத்து என்றால் சவுதி அரேபியாவின் பக்கம் நிற்பதாக பாகிஸ்தான் வாக்குறுதி வழங்கியதாக தகவல்கள் கூறுகின்றன.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply