மாடுகளை பாதுகாக்க மாட்டிறைச்சி இறக்குமதி : ஜனாதிபதி
நாட்டில் மாடறுப்பை முழுமையாக இல்லாமல் செய்வதற்காக இறைச்சிக்காக தேவைப்படும் உணவுகளை வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யுமாறு தான் நிதி அமைச்சர் ரவி கருணாநாயகவிடம் கோரியுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.களுத்துறை பயாகலை இந்து கல்லூரியில் இன்று நடைபெற்ற 2016 ஆம் ஆண்டு தைப்பொங்கல் பண்டிகை நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
இது தொடர்பில் மேலும் கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி;
புதிய அரசியல் அமைப்பை உருவாக்குவதன் மூலம் மாத்திரம் இந்த நாட்டில் இனங்களுக்கு இடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியுமா என்பது கேள்விக்குறி இருப்பதாக தெரிவித்த ஜனாதிபதி, உலகில் அனைத்து அரசியல் அமைப்புக்களையும் விட “த்ரிபிடகய”, பகவத் கீதை, குர்ஆன் மற்றும் பைபிள் போன்ற புனித வேதநூல்கள் மூலம் உலக மக்கள் அனைவரயும் மிகவும் இலகுவாக ஒன்றிணைக்க முடியும் எனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply