ஈழத்தமிழர்களை வைத்து அரசியல் செய்வதை தமிழகம் நிறுத்த வேண்டும்!
ஈழத்தமிழர்களை வைத்து அரசியல் செய்வதை தமிழக மக்கள் நிறுத்தி அவர்களுக்கு உதவி செய்ய முன்வர வேண்டும் என கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார். இந்தியாவின் பாண்டிச்சேரியில் நடைபெற்ற உலக தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.தமிழ் தேசிய கூட்டமைப்பு தமிழர்களின் உரிமைகளை பெற்றுக் கொள்வதற்காக உயிரை கொடுத்து செயற்படுவதற்கும் தயாராக இருக்கின்றது.இன்று ஸ்ரீலங்காவில் தமிழுக்கும் தமிழர்களுக்கும் நல்ல வரவேற்பு இருக்கின்றது. இந்தியாவிலிருந்து ஸ்ரீலங்கா சென்ற தொப்புள் கொடி உறவுகள் மலையகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.
இலங்கையில் தமிழ் அரச கரும மொழியாக அங்கீகரிக்கப்பட்டு நாணயத்தாள்களிலும் தமிழ் மொழியில் எழுதப்பட்டுள்ளது. இவ்வாறு பல்வேறு வகையிலும் தமிழ் மொழிக்கு அரச அங்கீகாரம் கிடைத்துள்ளது. இலங்கையில் இருக்கின்ற ஒரு சில இனவாத அமைப்புகள் கடந்த காலங்களில் தமிழ் மொழியை அடக்கி ஆழ நினைத்ததன் காரணமாக அங்கு போர் ஒரு ஏற்பட்டது. இதன் காரணமாக நாம் 30 வருடங்கள் பின் நோக்கி செல்ல வேண்டிய ஒரு நிலை ஏற்பட்டது.
இதனால் பாரிய உயிர் இழப்புகளையும் உடமைகளையும் இழக்க வேண்டிய ஒரு நிலை ஏற்பட்டது. ஆனால் யுத்தத்தின் பின்பு படிப்படியாக வளர்ச்சி அடைந்து வருகின்றோம். இந்த யுத்தம் காரணமாக வடகிழக்கு மக்களும் மலையக இளைஞர்களும் பாதிக்கப்பட்டனர்.
இந்நிலையில் ஜனாதிபதி மைத்திரபால சிறிசேன பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகிய இருவரும் தமிழர்களின் விடயம் தொடர்பாக உன்னிப்பாக கவனித்து செவி சாய்த்து வருகின்றனர் எனத் தெரிவித்த வேலுச்சாமி இராதாகிருஸ்ணன்
உலக தமிழர் பண்பாட்டு இயக்கத்தின் அடுத்த மாநாட்டை ஸ்ரீலங்காவில் நடத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் இதற்கு அரசாங்கம் முழுமையான ஒத்துழைப்பை வழங்கும் எனவும் தெரிவித்துள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply