புதிய அரசியல் யாப்பு குறித்து தமிழ் மக்களின் கருத்தை அறிய விசேட குழு :மனோ கணேசன்

manoஉத்தேச அரசியல் யாப்பு தொடர்பில் வடக்கு கிழக்குக்கு வெளியில் வாழும் தமிழ் மக்களின் கருத்துக்களைப் பெற்றுக்கொள்ள 16 பேர் அடங்கிய விசேட குழுவொன்றை அமைக்க தமிழ் முற்போக்குக் கூட்டணி நடவடிக்கை எடுத்துள்ளது.பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், சட்டத்தரணிகள், புத்திஜீவிகள் ஆகியோர் இந்தக் குழுவில் இடம்பெறவுள்ளதாக இக்கூட்டணியின் தலைவரும் அமைச்சருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

வடக்கு கிழக்குக்கு வெளியிலுள்ள தமிழ் மக்களின் கருத்துக்களை அரசியல் யாப்பில் உள்வாங்குவதே இந்தக் குழுவின் நோக்கம் எனவும் அமைச்சர் மேலும் கூறியுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply